15.4 ஓவரில் 141 ஓட்டங்கள் எடுத்து வெற்றி! மேற்கிந்திய தீவுகளை தரைமட்டமாக்கிய இருவர்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை நியூசிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆல்அவுட்
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. 
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பால் நாடு திரும்ப கேட்ட வீரர்கள்! மறுத்து விளையாடக் கூறிய இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 18.4 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஸ்டன் சேஸ் 38 (32) ஓட்டங்களும், ரோமாரியோ ஷெப்பர்ட் 22 பந்துகளில் 36 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) எடுத்தனர்.
ஜேக்கப் டுஃபி 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுகளும், சான்ட்னர், ஜெமிசன், பிரேஸ்வெல் மற்றும் சோதி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
கான்வே 47 ஓட்டங்கள்
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெவோன் கான்வே 47 (42) ஓட்டங்களும், டிம் ராபின்சன் 45 (24) ஓட்டங்களும் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது (4வது போட்டி மழையால் கைவிடப்பட்டது). 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |