ஏழாவது உலகக் கோப்பையில் களமிறங்கும் வீரர்! வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ஃபின் ஆலெனுக்கு இது முதல் டி20 உலகக் கோப்பை ஆகும்
மார்ட்டின் கப்தில் 121 டி20 போட்டிகளில் 2 சதங்களுடன் 3497 ஓட்டங்கள் குவித்துள்ளார்
நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் கப்தில் ஏழாவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பைக்கான தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் அதிரடி வீரர்களான ஃபின் ஆலென், மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்தில், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Twitter (@BLACKCAPS)
வேகப்பந்து வீச்சுக்கு டிம் சௌதீ, டிரெண்ட் போல்ட், ஃபெர்குசன், மில்னே ஆகியோர் உள்ளனர். அதேபோல் ஜிம்மி நீஷாம், டேர்ல் மிட்செல், சான்ட்னர் ஆகிய ஆல் ரவுண்டர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தொடக்க வீரரான மார்ட்டின் கப்திலுக்கு இது 7வது டி20 உலகக் கோப்பை ஆகும். இதன்மூலம் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார்.
AFP