வெனிசுலா நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தை மீட்பு: நெகிழ்ச்சியான வீடியோ
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம்
வெனிசுலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மிகப்பெரிய நிலநடுக்கத்தின் காரணமாக நாட்டில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
ரிக்டர் 7.1 மற்றும் ரிக்டர் 7.5 அளவிலான சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களில் சிக்கி கிட்டத்தட்ட 920 பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாகவும், 3,360 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
An 18 day old baby rescued from the earthquake rubble in Venezuela is handed back to the Father. Notice the joy and love on everyone’s face especially the Father… can you imagine how he feels right now?
— nedubillions🇦🇷🇪🇸🇰🇷 🌚 (@iamnedubillions) June 27, 2026
God is very wonderful.pic.twitter.com/xQ9xqZumhU
பச்சிளம் குழந்தை மீட்பு
மோசமான நிலநடுக்கத்தை தொடர்ந்து லா குவைரா நகரில் மீட்புப் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்புக் குழுவினர் பொதுமக்களை தொடர்ந்து மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சி ஒன்றில், கட்டிட இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தை அவரது தந்தை என்று நம்பப்படும் நபர் ஒருவரிடம் ஒப்படைக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் குழந்தை மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் தாயும் அதே இடத்தில் இருந்து மீட்கப்பட்டு இருப்பதாக AFP செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |