மணமேடையில் கலவரம்..!இனிப்பு ஊட்டியதற்காக சண்டையிட்டு உருண்ட மணமக்கள்
திருமண மேடையில் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
அடித்துக் கொண்ட மணமக்கள்
இணையத்தில் எப்போதுமே திருமணங்கள் தொடர்பான செய்திகள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம்.
அதிலும் வித்தியாசமான திருமணங்கள் அல்லது திருமணங்களில் நடைபெறும் வித்தியாசமான நிகழ்வுகள் இணையவாசிகளின் கவனத்தை அதிகமாகவே ஈர்க்கிறது.
Kalesh B/w Husband and Wife in marriage ceremony pic.twitter.com/bjypxtJzjt
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 13, 2022
அந்த வகையில் தற்போது ட்விட்டரில் வைரலாகி வரும் வீடியோவில் ஒன்றில் மணமக்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்து கொள்கிறார்கள்.
இனிப்பு ஊட்டியதால் ஏற்பட்ட மோதல்
அந்த வீடியோவில், மணமகன் மணப்பெண்ணுக்கு இனிப்பு கொடுக்க முயற்சி செய்கிறார், ஆனால் அதனை மணப்பெண் வேண்டாம் என்று மறுப்பது போல் மணமகனின் கையை தள்ளி விடுகிறார்.
இருப்பினும் வலுக்கட்டாயமாக மணமகன் மணப்பெண்ணுக்கு இனிப்பு வழங்க முயன்றார், இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண் மாப்பிள்ளை தாக்க மாப்பிள்ளையும் திரும்ப மணப்பெண்ணை தாக்குகின்றார்.
இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக மாறி மாறி தாக்கிக் கொள்கின்றனர்.
அத்துடன் அந்த வீடியோ உறவினர்கள் மணமக்களை சமாதானப்படுத்த முயற்சிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.