காதல் திருமணம் செய்த 19 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை!
புதுச்சேரியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் 8 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காதல் திருமணம்
புதுச்சேரியின் மூலக்குளம் அடுத்த பிச்சைவீரன்பேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இளம்பெண் மதுபாலா (19). இவரும் வசந்தகுமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
அதன் பின்னர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Representative Image
தூக்கிட்டு தற்கொலை
அத்துடன் வசந்தகுமாரின் குடும்பத்தினர் மதுபாலாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு மதுபாலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தகராறில் மனமுடைந்ததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், மதுபாலாவின் தாயார் மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.