லொட்டரியில் 1 மில்லியன் டொலர் வென்ற புதுமண தம்பதி
newlywed canada couple won 1 million in lottery: கனடாவை சேர்ந்த புதுமண தம்பதி லொட்டரியில் 1 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளனர்.
1 மில்லியன் டொலர் வென்ற புதுமண தம்பதி
கனடாவின் ஹாலிஃபாக்ஸைச் சேர்ந்த டிரெவர்(Trevor) மற்றும் ஆம்பர் முல்லின்ஸ்(Amber Mullins) சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி ஆகும்.

சமீபத்தில், டிரெவர் ஹாலிஃபாக்ஸில் உள்ள இங்லிஸ் ஸ்ட்ரீட் சர்க்கிள் கே கடையில் ஒரு லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
செப்டம்பர் 12 ஆம் திகதி நடைபெற்ற லாட்டோ 6/49 கோல்ட் பால் குலுக்கலில் இந்த புதுமண தம்பதி வாங்கிய லொட்டரி டிக்கெட்டிற்கு 1 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ9.58 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
இந்த வெற்றி குறித்து பேசிய முல்லின்ஸ், 'ஒருவேளை நாம் சில ஆயிரம் வென்றிருப்போம்' என்று நான் நினைத்து, எங்கள் தேனிலவுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம்.
ஆனால் 1 மில்லியன் டொலருக்கான கோல்ட் பால் குலுக்கலில் வென்றிருந்தோம் என்பதை அறிந்ததும், ஆம்பர் 4 மணி நேரம் அழுதார்.
என் வாழ்க்கையே மாறிவிட்டதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு இருந்த எல்லா பணப் பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டன.
நான் செய்ய விரும்புவதெல்லாம் என் பிள்ளைகளின் வாழ்க்கையைச் சற்றே எளிதாக்குவதுதான், உங்கள் பிள்ளைகளுக்காக அதைச் செய்ய முடிந்தால் அது ஒரு பெருமையான தருணம்" என தெரிவித்துள்ளார்.
பரிசுத்தொகையின் ஒரு பகுதியை ஓய்வூதியத்திற்காகச் சேமித்து வைப்பதும், தங்களுக்கு விருப்பமான மஞ்சள் நிற கார்வெட் காரை வாங்குவதுமே இந்த தம்பதியரின் தற்போதையை திட்டம் ஆகும்.
மேலும், தங்களது 2 மகள்களின் கல்விக் கடன்களை அடைப்பதற்கும், பேரனுக்காக ஒரு கல்வி நிதியைத் தொடங்குவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
லாட்டோ 6/49 குலுக்கல்கள் ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெறுகின்றன. கிளாசிக் ஜாக்பாட் எப்போதும் 5 மில்லியன் டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் கோல்ட் பால் ஜாக்பாட் 10 மில்லியன் டொலரில் தொடங்கி 60 மில்லியன் டொலரை தாண்டக்கூடும்.
வழக்கமான நடைமுறைகளின் படி, கடையின் உரிமையாளர்கள் 1% விற்பனையாளர் பரிசைப் பெறுவார்கள்.