திருமணமான 2வது நாளில் கணவனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த 27 வயதான மனைவி! சிலையாக நின்ற பரிதாபம்
தமிழகத்தில் திருமணமான 2வது நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் மணிமேகலை (27). பி.எஸ்சி. நர்சிங் படித்து முடித்த இவர் சென்னையில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையில் கண் பரிசோதனை செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மணிமேகலைக்கும், குப்புசாமி என்பவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் நேற்று காலை மணிமேகலை, கணவர் மற்றும் உறவினர்களுடன் பண்ருட்டியில் இருந்து, தாய் வீட்டான மருதுார் நத்தமேட்டிற்கு வந்தார். மாலை பண்ருட்டிக்கு புறப்பட்டனர்.
அப்போது மணிமேகலை புடவை மாற்றி வருவதாக அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகத்தின் பேரில் ஜன்னல்வழியாக பார்த்த போது மின் விசிறியில் மணிமேகலை துாக்கில் தொங்கினார்.
இதை பார்த்து குப்புசாமி உள்ளிட்ட அனைவரும் பேரதிர்ச்சியடைந்தனர். பின்னர் கதவை உடைத்து சென்று பார்த்த போது மணிமேகலை இறந்திருந்ததை கண்டு கதறி அழுத நிலையில் அதிர்ச்சியில் இருந்த மீளாத குப்புசாமி சிலை போல அசைவற்று நின்றார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் மணிமேகலை சடலத்தை கைப்பற்றிவிட்டு அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.