உங்க மகள் தற்கொலை பண்ணிகிட்டா! புதுப்பெண்ணை காண மாப்பிள்ளை வீட்டுக்கு சென்ற பெற்றோர் கண்ட அதிர்ச்சி காட்சி
இந்தியாவில் புதுப்பெண் வீட்டில் இறந்து கிடந்த நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் மோகதிபூர் கிராமத்தை சேர்ந்த அமீத் வர்மா. இவருக்கும் அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா பெற்றோருக்கு போன் செய்த வர்மா உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என கூறியிருக்கிறார்.
இதனால் பதறிய பெற்றோர் உடனடியாக மகளை காண வந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அர்ச்சனா உடல் முழுவதிலும் காயத்துடன் இறந்துகிடந்தார்.
மேலும் அங்கு வர்மா உள்ளிட்ட குடும்பத்தார் யாருமே இல்லை. இது குறித்து அவர்கள் பொலிசில் புகார் அளித்தனர். அதில், எங்கள் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அடித்து கொன்றுவிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து அர்ச்சனா சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.