மூக்கில் ரத்தம் வழிய... நேரலையில் செய்தி வாசித்த ஊடகவியலாளர்... அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்
சீனாவில் பிரபல செய்தி ஊடகத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மூக்கில் ரத்தம் வழிய செய்தி வாசித்த சம்பவத்தில் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
குறித்த நிகழ்ச்சியில், அந்த ஊடகவியலாளர் ஏன் உடனடியாக மருத்துவ உதவியை நாடவில்லை என மக்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த செய்தி ஊடகத்தில் பகல் நேர செய்தியை நேரலையில் வாசித்துக்கொண்டிருந்தார் பிரபல ஊடகவியலாளரான Huang Xinqi. திடீரென்று அவரது மூக்கியில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.
ஆனால் அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் Huang Xinqi செய்தி வாசிப்பதை தொடர்ந்துள்ளார். நேரலையில் நடந்த இச்சம்பவத்தை பார்க்க நேர்ந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
ஆனால், நேரலையில் நடந்த இச்சம்பவத்தின் இடையே மருத்துவ உதவியை நாடினால், தாம் வேலையில் இருந்து நீக்கப்படாலம் என்ற அச்சம் காரணமாகவே மருத்துவ உதவியை நாடாமல் Huang Xinqi தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சி முடியும் வரையில் Huang Xinqi ரத்தம் வழிய செய்தி வாசித்துள்ளார். திங்களன்று பகல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரித்ததில், தமது கவலை மொத்தமும், அந்த நிகழ்ச்சி நல்லபடியாக முடிய வேண்டும் என்பதே என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவருக்கு என்ன பிரச்சனை? ஏன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது என்பதை அவர் குறிப்பிடவில்லை.