பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி
ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கான விதிகளில் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன.
பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பயணிகள் இனி electronic travel authorisation (ETA) என்னும் மின்னணி பயண அங்கீகாரம் ஒன்றைப் பெறுவது கட்டாயமாகும்.
இந்த மின்னணி பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கான ஒன்லைன் விண்ணப்பங்களை, இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் அளிக்கலாம்.
இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணி பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 10 பவுண்டுகள் ஆகும். பின்னர் அதை 16 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டுவருகிறது.
பிரித்தானிய மற்றும் அயர்லாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், பிரித்தானியாவில் Settled Status அல்லது pre-Settled Status நிலை உடையோர் உட்பட சில தரப்பினருக்கு மட்டுமே இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |