வெளிநாடுகளில் வாழும் பிரித்தானியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு தீர்ப்பு: விவரம் செய்திக்குள்
பிரெக்சிட்டால் இலாபம் என்று பிரித்தானிய அரசியல்வாதிகள் எண்ணியதால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியது பிரித்தானியா.
ஆனால், உண்மையாகவே பிரெக்சிட்டால் இலாபமா நஷ்டமா என்பது, அனுதினமும் பல்வேறு வகையில் பிரச்சினைகளை அனுபவித்து வரும் வெளிநாடுவாழ் பிரித்தானியர்களுக்குத்தான் தெரியும்!
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பல ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களாகவே வாழ்ந்து வந்த பிரித்தானியர்கள், இன்று திடீரென குடியுரிமை இழந்து தாங்கள் குடிமக்களாக வாழ்ந்த நாட்டிலேயே வெளிநாட்டவர்கள் போல வாழும் ஒரு நிலைமை உருவாகியுள்ளது.
சமீபத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று, ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் பிரித்தானியர்களைக் கலங்கடித்துள்ளது. நீதிமன்றத்துக்குச் சென்றாலாவது நியாயம் கிடைக்கும் என்று நம்பியிருந்த பிரித்தானியர்கள், நீதிமன்றம் ஒன்று அளித்துள்ள தீர்ப்பால் முழு நம்பிக்கையும் இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
ஆம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், நேற்று, பிரெக்சிட் என்பதன் உண்மையான பொருள், பிரித்தானியர்கள் இனி ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் அல்ல என்பதுதான் என்பதை ஆணித்தரமாக உறுதிசெய்துள்ளது.
நடந்தது என்ன? பிரான்சில் 15 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் பிரித்தானிய பெண் ஒருவர், பிரெக்சிட்டுக்கு முன் பிரான்சில் தேர்தலில் வாக்களித்திருக்கிறார், தான் வாழும் Thoux நகரில் வேட்பாளராகவும் போட்டியிட்டிருக்கிறார். Alice Bouillez என்ற அந்தப் பெண், 1984 முதல் பிரான்சில் வாழ்ந்து வருகிறார்.
அவர் பிரான்ஸ் நாட்டவர் ஒருவரை திருமணமும் செய்துள்ளார். இத்தனை காரணங்கள் இருப்பதால், தான் தனியாக பிரெஞ்சுக் குடியுரிமைக்கு வேறு விண்ணப்பிப்பது தேவையில்லாத விடயம் என்று நினைத்திருக்கிறார் அவர். ஆனால், பிரெக்சிட்டுக்குப் பின், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, 2020 மார்ச்சில் நடைபெற்ற முனிசிபாலிட்டி தேர்தலில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
தனது பெயரை மீண்டும் பதிவு செய்யும்படி அவர் செய்த முறையீட்டை மேயர் நிராகரிக்க, அவர் Auchஇலுள்ள regional நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அந்த நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்துள்ளது.
ஆனால், நேற்று அந்த வழக்கில் தீர்ப்பளித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், ஒருவர் தான் வாழும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டின் குடியுரிமையை பெற்றுவைத்திருப்பது, அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகன் அல்லது குடிமகள் என்னும் நிலையை பெறுவதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் அத்தியாவசியமாகும். அப்படி குடியுரிமை பெற்றிருந்தால்தான், அவர் குடிமகனுக்கான நன்மைகளை அனுபவிக்க முடியும் என்று கூறிவிட்டது.
ஆகவே, பிரெக்சிட்டின் விளைவாக, பிரித்தானியர்கள் தாமாகவே ஐரோப்பிய ஒன்றியக் குடியுரிமையை இழந்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்துள்ளது நீதிமன்றம். அத்துடன், அதன் விளைவாக, பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வாக்களிக்கும் உரிமையையும், (அவர்கள் வாழும் நாட்டில் வித்தியாசமான விதிகள் இருந்தாலன்றி) முனிசிபல் தேர்தலில் பங்கேற்கும் உரிமையையும் இழந்துவிட்டார்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் பிரித்தானியர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது எனலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022