புடினுக்கு மாரடைப்பு என வெளியாகவிருக்கும் செய்தி?: பின்னணியில் ரஷ்ய தளபதிகளின் பயங்கர திட்டம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை இரகசியமாகக் கொன்றுவிட்டு, அவருக்கு மாரடைப்பு என செய்தி பரப்ப ரஷ்யத் தளபதிகள் திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போரில் சொதப்பி வரும் புடின் மீது கடுமையான ஆத்திரத்தில் இருக்கும் ரஷ்ய தளபதிகள், அவரைக் கொல்லத் திட்டமிட்டுள்ளர்களாம்.
ஏற்கனவே புடினுடைய உடல் நிலை மோசமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை சாதகமாகப் பயன்படுத்தி, புடினுடைய பாதுகாப்பு அதிகாரிகளே அவரை இரகசியமாகக் கொன்றுவிட்டு, புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறி விடயத்தை மறைத்துவிட திட்டமிட்டு வருகிறார்களாம்.
அதைவிட மோசமான தகவல் என்னவென்றால், புடினைக் கொன்றுவிட்டு, அவரை விட கடுமையான ஒருவரைத் தலைவராக்கி, உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு மீண்டும் ரஷ்யப் படைகள் அனுப்பப்படலாம் என பாதுகாப்பு நிபுணரான Dr Robert Thornton என்பவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, புடின் டான்பாஸ் பகுதியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதும் அவர்களுக்கு பிடிக்கவில்லையாம்.
ஏற்கனவே 1970களில், இதேபோல Leonid Brezhnev என்னும் முன்னாள் சோவியத் யூனியன் தலைவரையும், வேறு சில கம்யூனிஸ்ட் தலைவர்களையும் காலிபண்ணிவிட்டு மாரடைப்பு என்று கூறியிருக்கிறார்களாம் ரஷ்யர்கள்!