சுவிஸ் மக்களுக்கு மாபெரும் ஷாக் கொடுக்க இருக்கும் ஒரு செய்தி
சுவிஸ் மக்களுக்கு மாபெரும் ஷாக் ஒன்றைக் கொடுக்க இருக்கிறது சுவிஸ் மின் ஒழுங்குமுறை அமைப்பு.
ஆம், 2023இல், சுவிட்சர்லாந்தில் மின் கட்டணம் சராசரியாக 47 சதவிகிதம் வரை அதிகரிக்க இருப்பதாக சுவிஸ் மின் ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஐந்து அறைகள் கொண்ட ஒரு வீட்டிற்கு, தோராயமாக ஆண்டொன்றிற்கு 180 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மின்கட்டணம் அதிகரிக்க உள்ளது.
அதேபோல் ஆண்டொன்றிற்கு 150,000 கிலோவாட் மணிநேரம் மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, கூடுதலாக 6,000 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவு பிடிக்க இருக்கிறது., அதுபோக வரி வேறு கூடுதலாக செலுத்தவேண்டும்.
ஆக, மொத்தத்தில், அடுத்த ஆண்டில் சுவிஸ் மக்கள் மிகப்பெரிய மின்கட்டண உயர்வு ஒன்றை சந்திக்கத் தயாராகவேண்டியதுதான்...