3 மாத குழந்தையை கார் ஏற்றி கொன்ற கொலையாளி கைது! விடுவிக்க கோரும் தாய்!
அமெரிக்காவில் 3 மாத குழந்தையை கார் ஏற்றி கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.
அமெரிக்காவில் நியூ யார்க் நகரத்தில் புரூக்ளின், கிளிண்டன் ஹில் பகுதியில் உள்ள ஒரு சாலையில், கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
அவ்வழியே ஒரு தாய் தனது 3 மாத குழந்தையை stroller வண்டியில் வைத்து சாலை ஓரமாக தள்ளிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, போக்குவரத்து சிக்னலை மீறி தவறான வழியில் தாறுமாறாக வந்த ஒரு கருப்பு நிற கார், குழந்தை மற்றும் தாய் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில், குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், தாய்க்கு படுகாயம் ஏற்பட்டதில், அவர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய நபர், அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தார். அனால், அவரது கார் நகராமல் நின்றதால், அதிலிருந்து இறங்கி அருகில் இருந்த மற்றோரு காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றார். அச்சமயத்தில் பொலிஸார் வந்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர் 28 வயதாகும் Tyrik Mott என்பது தெரியவந்தது. அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை புரூக்ளின் குற்றவியல் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில், டயரிக்கின் தாய் உட்பட அவரது உறவினர்கள் சுமார் ஐந்து பேர் விசாரணையில் கலந்து கொண்டனர். "அவர் ஒரு நல்ல பையன்," என்று கூறி அவரை விடுவிக்க கோரி டயரிக்கின் தாய் கோரியுள்ளார்.
மேலும் டயரிக் மீது இதுவரை எந்த ஒரு பதிவுகளும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், Tyrik மீது மேலும் சில போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதியப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


