நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2022
உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது.
உலகின் நேரக்கணக்கின்படி நியூசிலாந்தில்தான் முதலில் புத்தாண்டு பிறக்கும். அந்த வகையில் இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2022 புத்தாண்டு பிறந்துள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் உள்ள மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்து முழக்கங்களை எழுப்பி 2022-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர், இதனை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்கவுள்ளது.
Here’s to 2022!
— Bloomberg Quicktake (@Quicktake) December 31, 2021
WATCH: New Zealand welcomes 2022 with a light display in Auckland #NYE2021 pic.twitter.com/Pb1XN4RW2W