அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிப்பு; சாப்பிடக்கூடியதா என ஆய்வு
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆசிபாபாத் காடுகளில் அடிலாபாத் வனப்பகுதியில் அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுற்றிலும் மலைகள், பசுமையான காடு.. அவற்றுக்கிடையே ஓடும் நீரோடைகள், அருவிகள்.. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பார்க்க ஆசிபாபாத் காடுகளுக்குச் செல்ல வேண்டும். இயற்கையின் அழகை ரசிக்க விரும்புவோருக்கு இந்த இடம் சிறந்த தேர்வாகும்.
இயற்கை புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான பட்டியல் ஒன்றாகிறது. இந்த காடுகளில் பல அரியவகை தாவரங்கள் மற்றும் பறவை இனங்கள் உள்ளன. சமீபத்தில் மற்றொரு அரிய வகை தாவரங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Photo: Rajesh Kanny
அரியவகை நீல நிற காளான்
சமீபத்தில், காகஜ்நகர் காடுகளில் வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் அரியவகை நீல காளான்களை கண்டனர்.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இந்த காளான்கள் துளிர்விட்டதாக கூறப்படுகிறது. இது ஆங்கிலத்தில் blue pinkgill என்றும் sky-blue mushroom என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த அரிய வகை காளான் நியூசிலாந்து காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. மேலும், அவற்றின் புகைப்படங்களை நியூசிலாந்தின் நாணயத்தில் காணலாம்.
Photo: Rajesh Kanny
முதன்முறையாக இந்தியாவில்..,
1989-ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் இந்த வகை காளான்கள் முதன்முறையாக நம் நாட்டில் கண்டறியப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், இவற்றை சாப்பிடலாமா அல்லது முதலுதவியாக பயன்படுத்தலாமா என்பது குறித்து வனத்துறையினர் தெளிவுபடுத்தவில்லை.
இது சாப்பிடக்கூடியதா, உணவில் பயன்படுத்தப்படலாமா அல்லது மருத்துவ குணங்கள் கொண்டதா, ஏதேனும் மருந்து தயாரிக்க பயன்படுத்தலாமா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்த்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Rare Blue Mushroom, New Zealand blue mushroom, Blue Mushroom in Asifabad forests, Sky Blue Mushroom, New Zealand currency notes, edible Mushroom