உலகின் தலை சிறந்த கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கிறிஸ் கெய்ர்ன்ஸின் கால்கள் செயலிழப்பு! சோகத்தில் ரசிகர்கள்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜாம்பவான் கிறிஸ் கெய்ர்ன்ஸ்ஸின் கால்கள் செயலிழந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.
கிரிக்கெட் உலகில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்த கிறிஸ் கெய்ர்ன்ஸ் அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தார். அவருக்கு இதயத்தில் இருந்து இரத்தம் செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை அடுத்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதோடு, உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு, பக்கவாதம் ஏற்பட்டு கால்கள் செயலிழந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஆரன் லயர்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிறிஸ் கெய்ர்ன்ஸ் குடும்பத்தார் அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். அதில், இதய அறுவை சிகிச்சை செய்த போது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர் அவர் கால்கள் செயலிழித்து விட்டது.
இந்த கடினமான நேரத்தில் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் பொது மக்களுக்கு நன்றி. அதே நேரத்தில் எங்கள் தனிப்பட்ட பிரைவசியை மதிப்பவர்களும் நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
கிறிஸ் கெய்ர்ன்ஸ் கடந்த 1989 முதல் 2004 வரை பந்துவீச்சில் 29.4 சராசரியையும், பேட்டிங்கில் 33.53 சராசரியை வைத்திருந்தார் (87 சிக்சர்கள் உட்பட).
இது அந்த சமயத்தில் உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.