மக்களிடம் முக்கியமாக நியூசிலாந்து பெண் பிரதமர் ஜெசிந்தா நேரலையில் பேசும் போது குறுக்கிட்ட மகள்! வெளியான வீடியோ
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்னா பேஸ்புக் நேரலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசி கொண்டிருந்த போது அவர் மகள் குறிக்கிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்னா பேஸ்புக் நேரலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள தளர்வுகள் குறித்தும் பேசிவந்தார்.
அப்போது திடீரென அவரது மகள் குறுக்கிட்டார். உடனே லைவ் பேச்சில் இருந்து கவனத்தை மாற்றிய பிரதமர், நெவி, இது உனது பெட் டைம் அல்லவா. நீ செல்ல. நான் சில விநாடிகளில் வருகிறேன் எனக் கூறி அனுப்பிவைக்கிறார்.
பின்னர் மக்களிடம் பேசிய அவர், இந்த நேரத்தில் நெவி தூங்குவாள் என்பதால் நான் பத்திரமாக, நிம்மதியாக உங்களுடன் பேசலாம் என நினைத்தே. ஆனால் தோற்றுவிட்டேன். இதுபோல் உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம். நல்ல வேளை இப்போது வீட்டில் எனது தாயார் இருக்கிறார்.
அவர் எனக்கு உதவுவார். சரி நாம் எங்கிருந்தோம் என்று பேச்சைத் தொடர்கிறார். சிறிது நேரத்தில் மீண்டும் குறுக்கிடும் அவரின் மகள், ரொம்ப நேரம் ஆகிவிட்டதே என செல்லக் குரலில் கேட்கிறார்.
ஆமாம், நிறைய நேரம் ஆகிவிட்டது எனக் கூறிவிட்டு பேஸ்புக் லைவ் மீட்டிங்கை முடித்துக் கொள்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.