இரட்டை கோல் அடித்த நெய்மர்..தெறிக்கவிட்ட PSG அணி
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கிளப் நட்புமுறை போட்டியில் ஜியான்பக் அணியை வீழ்த்தியது.
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன்
Club Friendlies தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் ஜியான்பக் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடந்தது.
PSGயின் நட்சத்திர வீரர் நெய்மர் ருத்ர தாண்டவம் ஆடினார். 40வது நிமிடத்தில் அவர் அபாரமாக கோல் அடித்தார்.
Getty Images
ஜியான்பக் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் முதல் பாதி 1-0 என இருந்தது.
நெய்மர் இரண்டு கோல்கள்
இரண்டாம் பாதியிலும் நெய்மர் ஆதிக்கம் செலுத்தினார். 83வது நிமிடத்தில் அவர் மிரட்டலாக கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து PSGயின் மார்கோ அசென்ஸியோ 88வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இறுதிவரை ஜியான்பக் அணியால் கோல் அடிக்க முடியாததால் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
YNA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |