கர்ப்பிணியான காதலியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நெய்மர்
பிரேசில் கால்பந்தின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கனவு கண்டிருந்த பெண்
சமூக ஊடக பக்கத்தில் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ள நெய்மருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 7 மில்லியன் ரசிகர்கள் தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.
Image: Instagram
31 வயதான நெய்மர், தமது காதலி Bruna Biancardi-ஐ தாம் கனவு கண்டிருந்த பெண் என பாராட்டியுள்ளார். மேலும், நமது வாழ்க்கையின் ஒரு பகுதியான நீ என்னுடன் வேண்டும் எனவும் நெய்மர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, நீங்கள் எவ்வளவு அம்பலப்படுத்தப்பட்டீர்கள், இவை அனைத்தின் மூலம் நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன் எனவும் நெய்மர் பதிவு செய்துள்ளார்.
தெளிவான முடிவெடுக்க
விளையாட்டு களத்திலும் வெளியேயும் நான் பல தவறுகளை செய்தேன் என குறிப்பிட்டுள்ள நெய்மர், அந்த தவறுக்கெல்லாம் விடையை வீட்டில் இருந்து தான் பெற்றேன் எனவும், நண்பர்கள் குடும்பத்தினரிடம் இருந்து தெளிவான முடிவெடுக்க கற்றுக்கொண்டேன் என்றார்.
@getty
நீ இல்லாமல் என்னை நினைத்துப் பார்க்கவே முடியாது என குறிப்பிட்டுள்ள நெய்மர், நம் நோக்கம் மேலோங்கும், நம் குழந்தை மீதான அன்பு வெல்லும், ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் நம் அன்பு நம்மை பலப்படுத்தும். நான் உன்னை காதலிக்கிறேன் என அந்த நீண்ட பதிவை முடித்துள்ளார்.