நெய்மருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை! PSG வெளியிட்ட அறிக்கை
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கணுக்காலில் காயம்
பிரேசிலின் நட்சத்திர வீரரான நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் கிளப் அணியில் விளையாடி வருகிறார். லில்லி அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட கணுக்கால் காயத்தினால் நெய்மர் அவதிப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் நடப்பு சீசனில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாயர்ன் முனிச் அணிக்கு எதிராக 0-2 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் அணி தோல்வியுற்றது.
@Christophe Ena - staff, AP
அறுவை சிகிச்சை
இந்த நிலையில், நெய்மருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி கூறியுள்ளது. இதுகுறித்து PSG வெளியிட்ட அறிக்கையில், 'நெய்மருக்கு வெள்ளிக்கிழமை காலை தோஹாவில் உள்ள ASPETAR மருத்துவமனையில் பேராசியர்களான பீட்டர் டி'ஹூக், ஜேம்ஸ் கால்டர் மற்றும் ரோட்ரிகோ லாஸ்மர் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர். தலையீடு மிகவும் நன்றாக இருந்தது. அவர் இப்போது பராமரிப்பு நெறிமுறையை பின்பற்றி ஓய்வெடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நெய்மர் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு விளையாடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுவதாக PSG தலைமை பயிற்சியாளர் கிரிஸ்டோஃப் கால்டியர் தெரிவித்துள்ளார்.
@Getty