7 வயது மகனின் கழுத்தை அறுத்து..தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட அப்பா
தமிழ்நாட்டின் நெய்வேலியில் நபர் ஒருவர், மகனை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகனை கொன்ற தந்தை
நெய்வேலியைச் சேர்ந்த 29 வயது நபர் ஸ்டீபன் ராஜ்; இவரது மனைவி பவித்ரா தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதன் பின்னர் ஸ்டீபன் ராஜ் தனது மகன் ஜஸ்வந்த்ராஜ் (7) உடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மகன் ஜஸ்வந்த்ராஜின் கழுத்தை அறுத்து ஸ்டீபன் ராஜ் கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் இருவரின் உடல்களை மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மனைவியின் இழப்பால் மகனை வளர்க்க சிரமப்பட்ட ஸ்டீபன் ராஜ் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |