இஸ்ரேல் அளித்த நெருக்கடி... நான்காவது முறையாக கைது செய்யப்பட்ட NHS பெண் மருத்துவர்
பிரித்தானியாவில் இடைநீக்கம் செய்யப்பட்ட NHS பெண் மருத்துவர் ஒருவர், பாலஸ்தீன தாயார் மற்றும் அவரது மகனை ஆதரித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்காவது முறையாக
தடை செய்யப்பட்ட இயக்கமான ஹமாஸ் படைகளுக்கு அவர் ஆதரவளித்தன் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை வேளையில், காவல்துறையினர் 31 வயதான டாக்டர் ரஹ்மே அலத்வானின் சவுத் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து, அவர் கைது செய்யப்படுவதாக அவரிடம் தெரிவித்தனர்.

பயங்கரவாதச் சட்டம் 2000-இன் பிரிவு 12-இன் கீழ் தான் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டபோது, அந்த அதிர்ச்சி சிகிச்சை மற்றும் எலும்பு மருத்துவ நிபுணர் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதலுக்குப் பின்னர் மருத்துவர் அலத்வான் இது நான்காவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மருத்துவர் அலத்வான் தற்போது பொது மருத்துவ கவுன்சிலின் விசாரணையிலும் உட்பட்டுள்ளார். நவம்பர் மாதம், அவர் இணையத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் யூத-விரோத மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களின் தொடர்ச்சி காரணமாக, அவர் 15 மாதங்களுக்குப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட தொடர் பதிவுகளில், யூத மேலாதிக்கம் பற்றிப் பேசியது, இஸ்ரேலியர்களை நாஜிக்களை விட மோசமானவர்கள் என்று முத்திரை குத்தியது மற்றும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதல்களுக்கும் ஆதரவளித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணிபுரியும் தகுதி குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன.
சமூக ஊடகத்தில் பதிவு
இந்த நிலையில் தற்போது பாலஸ்தீன பெண் தற்கொலை குண்டுதாரி மற்றும் 2023 அக்டோபரில் இஸ்ரேல் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட அவரது மகன் குறித்து மருத்துவர் அலத்வான் பெருமையாக பேசியதே கைதுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படைகள் அனுப்பிய முதல் தர்கொலை குண்டுதாரி இந்த Reem Al-Riyashi. இவரது மகனே, அக்டோபர் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர்.

2004ல் நடந்த சம்பவம் தொடர்பிலேயே மருத்துவர் அலத்வான் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். இதன் சில மணி நேரங்களிலேயே பொலிசார் மருத்துவர் அலத்வானின் குடியிருப்புக்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு எதிராக பலமுறை விவாத கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்து வந்தவர் மருத்துவர் அலத்வான், தற்போது அந்த நாடு அளித்த அழுத்தம் காரணமாகவே கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |