ஈரான் போரால் மருத்துவமனைகளுக்கு ஏற்பட இருக்கும் பாரிய சிக்கல்: அதிரவைக்கும் ஒரு தகவல்
ஈரான் போரால் எரிபொருள் விலைகள் உயர்ந்துவருகின்றன. விமான கட்டணங்கள் உயர்ந்துவருகின்றன.
முக்கிய உணவுப்பொருட்கள் சிலவற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்பட இருப்பதாக தகவல் வெளியாகிவருகிறது.
இந்நிலையில், ஈரான் போரால் பிரித்தானிய மருத்துவமனைகளுக்கும் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனைகளுக்கு ஏற்பட இருக்கும் சிக்கல்
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளது எரிபொருள் விநியோகம் மட்டுமல்ல. அடிப்படை மருந்துகள் தயாரிக்க உதவும் மூலப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு உருவாகிவருகிறது.

பாராசிட்டமால், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை தயாரிக்க உதவும் மூலப்பொருட்கள், வழக்கமாக வரும் அளவில் கால் பங்கு மட்டுமே பிரித்தானியா வந்தடைந்துள்ளதாகவும், அதனால், விரைவில் அந்த மருந்துகள் தயாரிப்பில் பிரச்சினை ஏற்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், புற்றுநோய்க்கான மருந்து, ஆன்டிபயாட்டிக்குகள் மற்றும் பக்கவாதத்துக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கும், வலி நிவாரணிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அதுவும், ஈரான் போர் முடிவுக்கு வரவில்லை என்றால், கூடிய விரைவில், அதாவது, ஜூன் மாதம் வாக்கிலேயே மருத்துவமனைகள் மருந்து தட்டுப்பாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |