விடுதலைப்புலிகள் தொடர்பில் 10 இலங்கையர்கள் மீது NIA குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்திய தேசிய புலனாய்வு பிரிவு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக 10 பேர் இலங்கையர்கள் மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்திய தேசிய புலனாய்வு குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் வசிப்பதாக கருத்தப்படும் ஹாஜி சலீம் என்பவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக போதைப்பொருள் வர்த்தகத்தில் முக்கிய ஆதாரமாக விளங்கியதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், இலங்கையர்கள் 10 பேர் உட்பட 13 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
Representational Image
10 இலங்கையர்கள்
இந்தியர்களான செல்வகுமார், எம்.விக்கி என்கிற பெருமாள் மற்றும் ஐயப்பன் நந்து ஆகியோர் தவிர ஏனைய 10 பேரும் இலங்கையர்கள் ஆவர்.
2022ஆண்டு டிசம்பரில் விக்கி, நந்து தவிர்த்து ஏனையவர்கள் கைது செய்யப்பட்டனர் என இந்திய தேசிய புலனாய்வு தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேக நபர்கள் வெளிநாட்டு வாட்ஸ்அப் எண்களைப் பயன்படுத்தி சட்டவிரோத வர்த்தகத்தை நடத்தி வருவதாக NIA தனது அறிக்கையில் கூறியுள்ளது.
The Hindu
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |