சிக்ஸர் மழைபொழிந்த நிக்கோலஸ் பூரன்! 44 பந்துகளில் 86 ஓட்டங்கள் விளாசல்..தவறிய வெற்றி
மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்தின் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI நியூயார்க் அணியை வீழ்த்தியது.
நிக்கோலஸ் பூரன் ருத்ரதாண்டவம்
வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் MI நியூயார்க் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் போட்டி நேற்று நடந்தது.
முதலில் ஆடிய MI நியூயார்க்கில் அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) ருத்ரதாண்டவம் ஆடினார்.
மொத்தம் 44 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசினார்.
கோஸ், ரவீந்திரா அரைசதம்
இதன்மூலம் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. நெத்ராவால்கர், பென் ட்வர்ஷுய்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 18.3 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆன்ரிஸ் கோஸ் 96 (54) ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 60 (30) ஓட்டங்களும் விளாசினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |