நிக்கோலஸ் பூரனின் சிக்ஸர்மழை வீடியோ
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பூரனின் அதிரடியில் பார்படோஸ் ராயல்ஸை வீழ்த்தியது.
ரஸல் 3 விக்கெட்டுகள்
கரீபியன் பிரீபியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) தலைவராக செயல்படுகிறார்.
🎯#TKRvBR | #WeAreTKR | #TrinbagoKnightRiders pic.twitter.com/mVjNNadbwf
— Trinbago Knight Riders (@TKRiders) August 30, 2025
நேற்று நடந்த பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் விளையாடியது.
முதலில் ஆடிய பார்படோஸ் ராயல்ஸ் 178 ஓட்டங்கள் குவித்தது. ரூதர்போர்டு 45 (22) ஓட்டங்களும், கதீம் அல்லேயனே 41 (37) ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆந்த்ரே ரஸல் 3 விக்கெட்டுகளும், ஆமிர் 2 விக்கெட்டுகளும், அலி கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய டிரின்பாகோ அணியில் ஹால்ஸ் 19 ஓட்டங்களில் வெளியேற, கார்டி 1 ரன்னில் நடையைக் காட்டினார்.
Edged and taken! 👊#TKRvBR | #WeAreTKR | #TrinbagoKnightRiders pic.twitter.com/5n4CgyuMrl
— Trinbago Knight Riders (@TKRiders) August 30, 2025
நிக்கோலஸ் பூரன் ருத்ர தாண்டவம்
அடுத்து வந்த அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன், காலின் மன்ரோ உடன் கூட்டணி அமைத்து சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அரைசதம் அடித்த காலின் மன்ரோ (Colin Munro) 44 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ருத்ர தாண்டவமாடிய பூரனும் அரைசதம் அடித்தார். கிரோன் பொல்லார்டு (Kieron Pollard) 9 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 19 ஓட்டங்கள் விளாசினார்.
இறுதிவரை களத்தில் நின்ற பூரான் 40 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 65 ஓட்டங்கள் குவிக்க, டிரின்பாகோ 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |