புற்றுநோயால் உயிரிழந்த குழந்தை.. ஓர் ஆண்டில் 12வது குழந்தைக்கு தந்தையான அமெரிக்க பிரபலம்.. நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு
அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் நிக் கெனான் 12வது குழந்தைக்கு தந்தையானதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நிக் கெனான்
நிக் கெனான் - அலிஸ்ஸா ஸ்காட் தம்பதி தங்கள் இரண்டாவது குழந்தையை வரவேற்றுள்ளனர். ஆனால் நிக்கிற்கு இது 12வது குழந்தை ஆகும்.
மரியா காரே மூலம் இரண்டு பிள்ளைகளும், பிரிட்னி பெல் மூலம் மூன்று பிள்ளைகளும், அப்பி டே ல ரொசா மூலம் மூன்று பிள்ளைகளும், பிரே டைசி மூலம் ஒரு பிள்ளையும், லெனிஷா கோல் மூலம் ஒரு பிள்ளையும் நிக் கெனானுக்கு உள்ளன.
அலிஸ்ஸா மூலம் அவருக்கு கடந்த ஆண்டு பிறந்த ஜென் ஸ்காட் என்ற குழந்தை புற்றுநோய் காரணமாக பிறந்த ஐந்து மாதங்களிலேயே உயிரிழந்தது.
12வது பிள்ளை
இந்த நிலையில் அலிஸ்ஸாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. நிக் மருத்துவமனையில் தனது பெண் குழந்தை மற்றும் அலிஸ்ஸாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
@ALYSSA SCOTT/SCREENGRAB
அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், 'எங்கள் வாழ்க்கை எப்போதும் மாறிவிட்டது. எனது ஒவ்வொரு மூச்சிலும் ஜென் இருக்கிறான். அன்று காலையில் அவனுடைய ஆவி எங்களுடன் இருந்ததை நான் அறிவேன். அவன் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தெரியும்.
அவன் ஒவ்வொரு நாளும் எனக்கு அறிகுறிகளை காட்டுகிறான். இந்த நினைவை நான் என்றென்றும் வைத்திருப்பேன்' என தெரிவித்துள்ளார். புதிய வாரிசை வரவேற்ற நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
@Clifton Prescod