அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை: உறுதியான கோகைன் பயன்பாடு
Nick Kyrgios faces suspension after cocaine test: கோகைன் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை
அவுஸ்திரேலிய டென்னிஸ் நட்சத்திரம் நிக் கிரியோஸ்(Nick Kyrgios) கோகைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு முகமை(ITIA) இந்த தகவலை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் ITIA வழங்கிய தகவலில், கடந்த ஜூன் 22ம் திகதி மயோர்கா ஓபன் போட்டிகள் நடைபெற்ற போது கிரியோஸுடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் ஜூலை 17ம் திகதி கோகைன் முதன்மை கூறுகளான பென்சோயில்கோமைன் மாதிரியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தவறை ஒப்புக் கொண்ட நிக் கிரியோஸ்
இந்த அறிவிப்பு வெளியான பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிக் கிரியோஸ் வெளியிட்ட பதிவில், “தான் பெரிய தவறிழைத்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.”
அத்துடன் தன்னுடைய குடும்பத்தினர், விளம்பரதாரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |