கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: இருதரப்பு உச்சி மாநாடு எப்போது? கசிந்த தகவல்
Trump seeks to meet Kim Jong Un in November: வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நவம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் நேரடி சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.
இலையுதிர் காலத்தில் இந்த நேரடி சந்திப்பை நடத்தவதற்காக தன்னுடைய அதிகாரிகளுடன் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்(Wall Street Journal) அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

நவம்பரில் சந்திப்பு
கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆசியாவிற்கு டிரம்ப் மேற்கொள்ள இருக்கும் அடுத்த சுற்றுப்பயணத்தின் போது இந்த சந்திப்பை நடத்த சரியான நேரமாக என்று டிரம்ப் கருதுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சீனாவின் சென்சென் நகரில் நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் போது கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நிகழ வாய்ப்பு இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |