ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர் அந்த தாயார் தான்: பிரித்தானிய பொலிசார் உறுதி
ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன நிக்கோலா புல்லியின் உடல் என பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரண்டு குழந்தைகளின் தாயார்
கடந்த ஜனவரி 27ம் திகதி வயர் ஆற்றங்கரையில் தனது நாயுடன் நடக்கச் சென்ற இரண்டு குழந்தைகளின் தாயாரான நிக்கோலா புல்லி, திடீரென்று காணாமல் போனார்.
Credit: Nicholas Razzell
இந்த நிலையில், திங்கட்கிழமை (பிப்ரவரி 20) லங்காஷயர் பொலிசார் தெரிவிக்கையில், ஞாயிறன்று வயர் ஆற்றில் சடலம் ஒன்றை கண்டெடுக்கப்பட்டதாகவும், நிக்கோலா புல்லி கடைசியாக காணப்பட்ட பகுதியில் இருந்து ஒரு மைல்கள் தொலைவில் இருந்து அந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது வயர் ஆற்றில் சடலம் ஒன்றைக் கண்டு பொலிஸை அழைத்தனர் என கூறப்படுகிறது. இந்த நிலையில், வயர் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன இரண்டு குழந்தைகளின் தாய் நிக்கோலா புல்லி என லங்காஷயர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
Credit: Dave Nelson
துயர சம்பவமாக இருப்பது
மட்டுமின்றி, இந்த வழக்கு விசாரணைக்காக உதவிய அனைவருக்கும் லங்காஷயர் காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னர் மாயமான நிக்கோலா புல்லி தொடர்பில் உறுதியான ஒரு தகவலை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்க விரும்பியதாகவும், ஆனால் அது இப்படியான துயர சம்பவமாக இருப்பது கவலையை அளிப்பதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
நிக்கோலா புல்லி குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளதாகவும், நிக்கோலா புல்லி மாயமான விவகாரம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை தாங்கள் உணர்ந்துகொண்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
@PA