மதுரோவுடன் நியூயார்க்கில் தரையிறங்கிய விமானம்: வெளியான காணொளி காட்சி
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஏற்றி வந்ததாக நம்பப்படும் விமானம் நியூயார்க்கில் தரையிறங்கியுள்ளது.
மதுரோ உடன் தரையிறங்கிய விமானம்?
அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் விமானம் நியூயார்க்கில் தரையிறங்கியது.
🚨 BREAKING: Venezuelan dictator Nicolas Maduro has just landed in New York aboard a DOJ 757
— Nick Sortor (@nicksortor) January 3, 2026
Communist Mayor Zohran Mamdani is going to throw a freaking FIT that his buddy Maduro will be housed there, and there’s NOTHING he can do about it 🤣🔥
pic.twitter.com/UpofqbX17Z
மதுரோவை ஏற்றிச் சென்ற விமானம் இப்போது நியூயார்க்கின் ஸ்டீவர்ட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக ட்ரம்பின் மகனான பெரோன் வில்லியம் ட்ரம்ப் காணொளி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அதில், மதுரோவுக்கு சிறையில் ஆயுள் தண்டனை மற்றும் கொடுங்கோலரைப் பூட்டு என்ற வார்த்தைகளுடன் இது டொனால்ட் ஜே. ட்ரம்பின் வரலாற்று சாதனை. அமெரிக்கா மீண்டும் முன்னிலை வகிக்கிறது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நியூயார்க் மேயர் கண்டனம்
NOW: Venezuelan President Nicolas Maduro and his wife arrived at Stewart Air National Guard Base, just north of New York City, on Saturday afternoon, hours after their capture during a daring U.S. military operation in Caracas.
— CBS News (@CBSNews) January 3, 2026
LIVE UPDATES: https://t.co/BbJZLnxbfk pic.twitter.com/BXmzxJTcrY
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது நடவடிக்கையை வரவேற்றுள்ள நிலையில், நியூயார்க்கின் புதிய மேயராக பதவியேற்றுள்ள மம்தானி அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்துள்ளார்.
அதில், இறையாண்மை கொண்ட ஒரு நாட்டை ஒருதலைப்பட்சமாக தாக்குவது ஒரு போர்ச் செயல் மற்றும் கூட்டாட்சி மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவரை நியூயார்க் நகருக்கு அழைத்து வந்தது மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பும் செயல் என்றும் மம்தானி கண்டித்து இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |