முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவியுடன் நியூயார்க் நீதிபதி முன் விசாரணைக்கு ஆஜரானார்.
நியூயார்க்கில் வெனிசுலா ஜனாதிபதி
கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸுடன் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிறை வாழ்க்கைக்கு பின், தனது மனைவியுடன் நியூயார்க் நீதிபதி முன் முதல் முறையாக மதுரோ ஆஜரானார்.
அவர் சிறையில் வழங்கப்படும் கால்சட்டை மற்றும் மேலாடை அணிந்து, கால்களில் விலங்கிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டார். நீதிமன்ற அறைக்குள் நுழைந்தபோது மதுரோ முகத்தில் குறிப்பிடத்தக்க அளவு மெலிந்து காணப்பட்டார்.

அதேபோல், மதுரோவின் மனைவி சிலியா கைது செய்யப்பட்டபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் காயங்களில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டதாகத் தோன்றியது. அவர் இப்போது கட்டுடனோ அல்லது முகத்தில் எந்தவிதமான காயங்களும் காணப்படவில்லை.
போதைப்பொருள் கடத்தல்
மதுரோவின் வழக்கறிஞர்கள், சட்டக் கட்டணங்கள் தொடர்பான புவிசார் அரசியல் தகராறு காரணமாக, அவர் மீதான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்ய கோரினர்.

மேலும், மதுரோவின் பாதுகாப்பு செலவுகளுக்கு வெனிசுலா அரசாங்க நிதியைப் பயன்படுத்த, அவரை அனுமதிக்க வேண்டுமா என்பது குறித்து பாதுகாப்புத் தரப்பும் அரசுத் தரப்பும் வாதிட்டதோடு விசாரணை தொடங்கியது.
அப்போது மதுரோவின் சட்ட செலவுகளுக்கு அரசாங்கப் பணத்தை பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம், அமெரிக்கா அவரது அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக பாதுகாப்புத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
தள்ளுபடி செய்வதே இதற்குத் தீர்வு
விசாரணையின் ஒரு கட்டத்தில் இவ்வழக்கினை தள்ளுபடி செய்வதே இதற்குத் தீர்வு என்று மதுரோவின் வழக்கறிஞர் கூறினார். ஆனால், நீதிபதியோ நான் இந்த வழக்கை தள்ளுபடி செய்யப் போவதில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்த சதித்திட்டம் தீட்டியதாக மதுரோ மற்றும் ஃப்ளோரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அத்துடன் தங்களுக்கு தடையாக இருந்தவர்களைக் கடத்தி கொலை செய்ததாகவும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். ஒருவேளை அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |