கண் மற்றும் வாய் இருக்கும் அணிகலனை அணிந்த நீடா அம்பானி.., அதன் விலை எவ்வளவு?
ஆனந்த் அம்பானி மற்றும் நீடா அம்பானி திருமண முந்தைய கொண்டாட்டத்தில் நீடா அம்பானி அணிந்திருந்த நகை பேசப்பட்டு வருகிறது.
அம்பானி வீட்டு திருமணம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.
இவர்களின் திருமண முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சியானது ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடைபெற்றது.
நீடா அம்பானியின் அணிகலன்
இந்நிலையில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்செண்ட்டின் 2-வது முன் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில் நீடா அம்பானி அணிந்திருந்த நெக்லஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு நீடா அம்பானி ரெடியாகும் வீடியோவை சிகையலங்கார நிபுணர் அமித் தாக்கூர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பண்டைய ரோமானியர்கள் அணிந்திருந்த பிரபலமாக உடை என கூறப்படும் வெள்ளை நிற உடையை நீடா அம்பானி அணிந்திருந்தார்.
மேலும், ஒரு பக்கம் வாய் மற்றும் மறுபுறம் கண் இருக்கும் ஷியாபரெல்லி ப்ரூச் என்கிற அணிகலனை அணிந்திருந்தார். இதன் விலையானது ரூ.2 லட்சத்திற்கும் மேல் என்று கூறப்படுகிறது.
அதோடு, அதே பிராண்டில் உள்ள Collier Ruban Spirale என்ற நெக்லஸை அணிந்திருந்தார். இதன் மதிப்பு ரூ.6 லட்சத்திற்கும் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |