பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்.., கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட விஜய்
பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதனை குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விஜய் உத்தரவு
இந்த நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தலைவர் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |