சுவிட்சர்லாந்தில் நிட்வால்டன் தமிழர் ஒன்றியம் நடத்திய முத்தமிழ் விழா!
நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவானது கடந்த 01.02.2025 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் யோகநாதன் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக சைவநெறிக்கூடத்தின் நிறுவனர், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் கலந்துகொள்ள, சிறப்பு விருந்தினராக பேர்ன் வள்ளுவன் பாடசாலை அதிபரும் நிறுவனருமான பொன்னம்பலம் முருகவேள் அவர்கள் கலந்துகொண்டார்.
கௌரவ விருந்தினர்களாக லுட்சேர்ன் தமிழ் மன்ற கல்விச் சேவையின் இணைப்பாளர் நாகநாதர் இரஞ்சன், தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளை லுட்சேர்ன் மாநிலப் பொறுப்பாளர் இரத்தினம் கிருபானந்தன், லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர் சந்திரபாலன் கலையழகன், எழுத்தாளரும், ஊடகவியலாளருமான கனகரவி ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தின் சிறப்பு அழைப்பை ஏற்று வருகை தந்த தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையின் பொறுப்பாளர் தம்பிஐயா ரகுராம் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் இயல், இசை, நாடகம் என பலவகையான கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் தமிழ்க்குழந்தைகள் அதில் பங்கெடுத்து தங்களுடைய தனித்திறன்களை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.