Job: மாதம் ரூ.67,700 சம்பளம்..தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
பல குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான, தேசிய நிறுவனத்தில் இருந்து Assistant Professor in Clinical Psychology பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின் படி, 1 பணியிடம் காலியாக உள்ளது . இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- நிறுவனம்- NIEPMD
- பணியின் பெயர்- Assistant Professor
- பணியிடங்கள்- 1
- விண்ணப்பிக்க கடைசி தேதி- Within 30 Days
- விண்ணப்பிக்கும் முறை- Offline
NIEPMD காலிப்பணியிடங்கள்
Assistant Professor in Clinical Psychology பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் M.Phil in Clinical or Rehabilitation Psychology (full time course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு தொடர்புடைய துறையில் கற்பித்தல் / ஆராய்ச்சியில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்ச்சி செயல்முறை
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
NIEPMD சம்பளம்
Associate Professor பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Level 11 ன் படி, மாதம் ரூ.67,700 – 2,08,700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும், திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |