ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்! பிரபல நாட்டில் தொடரும் சிறைச்சாலை தாக்குதல்

Nigeria Prisoners Escape Jailbreak
By Ragavan Oct 24, 2021 09:29 AM GMT
Report

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று சிறையைத் தாக்கி, சுமார் 575 கைதிகளை விடுவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் நடந்துள்ள மூன்றாவது சிறைச்சாலை தாக்குதல் சம்பவம் ஆகும்.

அங்கு ஒரு பெரிய சிறை தப்பித்தல் சம்பவம் பதிவாகி, இன்னும் முழுதாக ஒரு வருடம் கூட முடியாத இந்த சம்பவம் நடந்துள்ளதால், இது நைஜீரியாவில் பாதுகாப்பான தடுப்புக்காவல் வசதிகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து தீவிர கேள்விகளை எழுப்புகிறது.

அந்நாட்டில் அதிகரித்து வரும் வன்முறையைத் தடுக்க அதிகாரிகள் ஏற்கனவே போராடிக்கொண்டிருந்த நேரத்தில், தற்போது தென்மேற்கு நைஜீரியாவில் இருந்து அறிவிக்கப்பட்ட இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓயோ (Oyo) மாநிலத்தில் உள்ள ஓயோ திருத்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் Olanrewaju Anjorin அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திடம் பேசும் போது, வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் சில துப்பாக்கிதாரிகள் இந்த சிறைச்சாலையைத் தாக்கியதாக கூறினார். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினால் சேதம் எவ்வளவு என்பது தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

தகவல்களின்படி, 2017 முதல் குறைந்தது 4,307 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களில் சிலர் மட்டுமே பாதுகாப்புப் படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

நைஜீரியாவில் இது இந்த ஆண்டின் மூன்றாவது ஜெயில்பிரேக் ஆகும். 2021-ல் மட்டும், 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் முந்தையை 2 முந்தைய ஜெயில்பிரேக்களில் விடுவிக்கப்பட்டனர் - செப்டம்பர் 13 அன்று 240 கைதிகள் விடுவிக்கப்பட்டனர், ஏப்ரல் 5 அன்று குறைந்தது 1,800 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இத்தகைய தாக்குதல்களில் தப்பியவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சம்பவங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அரசாங்கத் தரவுகளின்படி, இத்தகைய தாக்குதல்களில் தப்பியோடியவர்களில் ஒரு பெரிய எண்ணிக்கையினர் இன்னும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவில்லை மற்றும் இன்னும் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். நைஜீரிய சிறைச்சாலைகளில் 70,000 கைதிகள் இருப்பதாகவும் ஆனால் சுமார் 20,000 அல்லது 27%பேர் மட்டுமே குற்றவாளிகள் என்றும் தரவு கூறுகிறது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US