நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் 162 பேர் பலி
நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் கிட்டத்தட்ட 162 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்
நைஜீரியாவின் குவாராவில் உள்ள இரண்டு கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கிட்டத்தட்ட 162 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வோரோ உள்ளிட்ட இரண்டு கிராமங்களுக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த பொதுமக்களை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.
மேலும் கிளர்ச்சியாளர்கள் அப்பகுதியில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கியதுடன் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

ஆளுநர் கண்டனம்
பயங்கரவாத குழுக்களின் இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலர் காட்டுக்குள் தப்பியோடியுள்ளனர்.
அத்துடன் நாட்டின் பாரம்பரிய மன்னர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத குழுவின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு அஞ்சி விரக்தியில் இந்த கோழைத்தனமாக தாக்குதலை பயங்கரவாத குழு நடத்தி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |