137 பள்ளி குழந்தைகள் விடுதலை! நைஜீரியாவை புரட்டி போட்ட கடத்தல் சம்பவம்
நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட 137 பள்ளி குழந்தைகள்
வடமேற்கு நைஜீரியாவில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி கடூனா(Kaduna) மாநிலத்தின் குரிகா (Kuriga) நகரில் இருந்து குறைந்தது 137 பள்ளி சிறுவர்கள் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டனர்.
இந்த குழந்தைகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன சமூக ஆலோசனை
குழந்தைகள் விடுதலை மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும், இந்த கொடுமை அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுவிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் அனுபவத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் "மன சமூக ஆலோசனை" வழங்கப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
கண்டனம்
பள்ளி குழந்தைகளை குறிவைத்த இந்த கடத்தல் நிகழ்வு நைஜீரியாவில் தேசிய அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் நடந்த முதல் பள்ளி குழந்தைகள் கடத்தல் இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Nigeria school children kidnap, 137 school children kidnapped nigeria, nigeria school children released, nigeria schoolchildren kidnapping, nigeria school abduction, nigeria kidnapping schoolchildren, nigeria school children psychosocial counselling,