திருமணம் நடக்கவிருந்த அதே நாளில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மணமகன் சடலம்! நிர்கதியாக நிற்கும் வருங்கால மனைவி
நைஜீரியாவில் இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடக்கவிருந்த அதே நாளில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Obi என்பவருக்கும் இளம்பெண்ணிற்க்கும் கடந்த 31ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்தது. இந்த நிலையில் திருமணம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது Obi விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து திருமணம் நடக்கவிருந்த அதே நாளில் Obiயின் சடலம் புதைக்கப்பட்டது. இந்த தகவலை அவரின் உறவினர் George Odok Jnr உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், என் சகோதரருக்கு திருமணம் நடக்கவிருந்த நாளில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வலிமிகுந்த மறைவுக்கு கடவுளை நாம் கேட்கலாமா? ஆனால் அது முடியாதே.
Obi திருமணத்தில் கலந்து கொள்ள வெகுதூரத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் அவரின் சடலத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
அவர் வருங்கால மனைவி திருமண உடையில் இருக்க வேண்டியவர், இப்போது நிர்கதியாக இருக்கிறார் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.