ஒலிம்பிக்கிலிருந்து நட்சத்திர தடகள வீராங்கனை வெளியேற்றம்! இடியாக வந்த செய்தி
நைஜீரிய தடகள வீராங்கனை Okagbare டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் Heat-ல் வெற்றிப்பெற்ற Okagbare, இன்று நடைபெறவிருக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதி சுற்றில் ஓடவிருந்தார்.
இந்நிலையில், ஜூலை 19 அன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, 32 வயதான Okagbare-வுக்கு மனித வளர்ச்சி ஹார்மோன் பாசிடிவ் என முடிவு வந்துள்ளதாக தடகள ஒருமைப்பாட்டு பிரிவு (AIU) தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று தற்காலிகமாக அவர் போட்டிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக Okagbare-விடம் அறிவிக்கப்பட்டதாக AIU தெரிவித்துள்ளது.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து சோதனையில் தோல்வயிடைந்த முதல் வீராங்கனை நைஜீரிய தடகள வீராங்கனை Okagbare என்பது குறிப்பிடத்தக்கது.
Okagbare, 2008-ல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.