அமெரிக்கா மீது 4 பயங்கரமான பழிவாங்கல்களை ஈரான் முன்னெடுக்கலாம்... அச்சுறுத்தும் தகவல்

Donald Trump Middle East Iran-Israel War
By Arbin Jun 23, 2025 05:58 AM GMT
Report

அமெரிக்கா சனிக்கிழமை முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, ஈரான் நான்கு பயங்கரமான பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என ஆய்வாளர்கள் பட்டியலிடுகின்றனர்.

எதிர்த்துப் போராட முடியவில்லை

ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது சனிக்கிழமை அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதல் நடவடிக்கைகள் தற்போது புதிய பதட்டங்களை கணிசமாக அதிகரிக்க செய்துள்ளது.

அமெரிக்கா மீது 4 பயங்கரமான பழிவாங்கல்களை ஈரான் முன்னெடுக்கலாம்... அச்சுறுத்தும் தகவல் | Nightmare Retributions Iran Unleash On America

ஈரானின் 86 வயதான உயர் தலைவர் காமெனி ஒரு கசப்பான மற்றும் தவறான முடிவை எடுக்கக்கூடும் என்று மத்திய கிழக்கு நிபுணரான ஜோனாதன் கிறிஸ்டல் கூறுகிறார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தற்போது ஈரானில் எங்கு வேண்டுமானாலும் ட்ரோன்கள் மற்றும் மேம்பட்ட F-35 போர் விமானங்கள், மொசாட் படுகொலைகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் மூலம் தாக்க முடியும் எனக் கூறும் அவர், ஈரானால் திறம்பட எதிர்த்துப் போராட முடியவில்லை என்பது கடந்த 9 நாட்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஈரானின் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பெரும்பாலும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அரணால் இடைமறிக்கப்படுகின்றன. மட்டுமின்றி ஈரானின் ஆதரவு ஹமாஸ் படைகள் மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது, சிரியா தற்போது அமெரிக்க தயவிற்காக காத்திருக்கிறது.

இரண்டு நண்பர்கள் பரம எதிரியான கதை... இஸ்ரேல் - ஈரான் மோதலின் விரிவானப் பின்னணி

இரண்டு நண்பர்கள் பரம எதிரியான கதை... இஸ்ரேல் - ஈரான் மோதலின் விரிவானப் பின்னணி

அத்துடன் ஈரானிய மக்களே தங்கள் தலைவர்களின் மறைவை சமூக ஊடகங்களில் கொண்டாடி வருவதாக ஜோனாதன் கிறிஸ்டல் கூறுகிறார். இந்த நிலையில் ஈரானின் மத அடிப்படைவாதிகளான தலைவர் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றே அவர் பட்டியலிடுகிறார்.

கதிரியக்க பரவல்

ஈரான் இதுவரை அணு குண்டு சோதனை எதுவும் முன்னெடுத்ததில்லை. ஆனால் இதுவரை இஸ்ரேலின் படுகொலை தாக்குதல்களில் இருந்து தப்பித்த அணு விஞ்ஞானிகள், வேறொரு வகை ஆயுதத்திற்காக யூரேனியத்தை மீண்டும் பயன்படுத்த முடியும்.

அமெரிக்கா மீது 4 பயங்கரமான பழிவாங்கல்களை ஈரான் முன்னெடுக்கலாம்... அச்சுறுத்தும் தகவல் | Nightmare Retributions Iran Unleash On America

அதாவது இஸ்ரேல் மற்றும் பிற எதிரிகளுடன் பகைமையைத் தீர்த்துக் கொள்ள ஈரான் dirty bomb என அழைக்கப்படுவதைப் பயன்படுத்தலாம். கதிரியக்க பரவல் சாதனம் அல்லது dirty bomb வழக்கமான அணு வெடிப்பை உருவாக்காது, ஆனால் கதிரியக்கப் பொருளைப் பரப்பும்.

அத்தகைய சாதனம் நகர மையங்களை மாசுபடுத்தும், அவசர சேவைகளை முடக்கும், டெல் அவிவ் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் பெரும் பீதியைத் தூண்டும்.

இரண்டாவதாக, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா படைகள் ஈரானுக்காக மத்திய கிழக்கு அல்லது மேற்கத்திய நகரங்களில் உள்ள அமெரிக்க இலக்குகளைத் தாக்கி, அங்குள்ள பொதுமக்கள் அல்லது உள்கட்டமைப்பு மீது தாக்குதல்களை நடத்தக்கூடும்.

போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்

போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்

மூன்றாவதாக, ஈரான் தனது எதிரிகளைப் பழிவாங்க ஹார்முஸ் ஜலசந்தியை மூடக்கூடும். மேற்கத்திய அழுத்தத்திற்கு பழிவாங்கும் விதமாக, 21 மைல் அகலமுள்ள ஜலசந்தியை கப்பல்களுக்கு மூடுவதாக ஈரான் கடந்த காலங்களில் அச்சுறுத்தியுள்ளது.

சைபர் தாக்குதல்கள்

இந்த நீரிணை ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ளது மற்றும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் குவைத் போன்ற எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கான முக்கிய ஏற்றுமதி பாதையாகும்.

அமெரிக்கா மீது 4 பயங்கரமான பழிவாங்கல்களை ஈரான் முன்னெடுக்கலாம்... அச்சுறுத்தும் தகவல் | Nightmare Retributions Iran Unleash On America

இந்த நீரிணையை மூடுவது எண்ணெய் விலையை உயர்த்தி பணவீக்கத்தைத் தூண்டும், உலகளவில் மந்தநிலை மற்றும் புவிசார் அரசியலில் உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்தும்.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி மற்றும் பிற வளைகுடா நாடுகள் தங்கள் உள்கட்டமைப்புகள் மீதான ஈரானிய தாக்குதல்களைப் பற்றி கவலை கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

நான்காவதாக, சைபர் தாக்குதல்கள். நேட்டோ மற்றும் சீனாவிற்கு அடுத்து ஈரானின் சைபர் இராணுவம் என்பது மிகவும் மேம்பட்ட ஒன்று என்றே கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடிகளை அளித்துள்ளது.

அமெரிக்கா மீது 4 பயங்கரமான பழிவாங்கல்களை ஈரான் முன்னெடுக்கலாம்... அச்சுறுத்தும் தகவல் | Nightmare Retributions Iran Unleash On America

ஈரானால் தற்போது பொருளாதார அமைப்புகள், மின்சாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்டவைகளை ஸ்தம்பிக்க வைக்க முடியும். ஈரான் மீது தாக்குதலுக்கு ட்ரம்ப் தயாரான போதே, ஈரானில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள,

அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட விவசாயம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US