தமிழர் சுந்தர் பிச்சை, ஜூக்கர்பர்க்கை விட அதிக ஊதியம்பெறும் இந்தியர் யார் தெரியுமா?
அமெரிக்காவில் The Wall Street Journal வெளியிட்டுள்ள அதிக ஊதியம் பெறும் தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலில் இந்தியர் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
CEO பட்டியல்
Palo Alto Networking நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் நிகேஷ் அரோரா (Nikesh Arora). இவரது ஊதியம் மற்றும் பிற கொடுப்பனவுகள் ஓர் ஆண்டுக்கு மொத்தம் 151.43 மில்லியன் டொலர்கள் ஆகும்.
நிகேஷ் தற்போது அதிக ஊதியம் பெறும் CEO பட்டியலில் இடம்பிடித்துள்ளார். The Wall Street Journal வெளியிட்டுள்ள இப்பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மொத்தம் 500 பேர் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில், இந்தியாவைப் பூர்வமாகக் கொண்ட 17 பேர் இடம்பிடித்துள்ளனர்.
யார் இந்த நிகேஷ் அரோரா?
டெல்லி ஏர்ஃபோர்ஸ் பப்ளிக் பள்ளியின் முன்னாள் மாணவரான நிகேஷ், IIT யில் Electrical Engineering பிரிவில் B.Tech பயின்றவர் ஆவார்.
கூகுள் நிறுவனத்தின் சிறப்பு வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த இவர், 2014ஆம் ஆண்டு கூகுளில் இருந்து வெளியேறினார்.
பின்னர் Soft Bank நிறுவனத்தின் தலைவராக தெரிவானார். அங்கிருந்து விலகிய நிகேஷ் 2018யில் Palo Alto Networking நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
தற்போது சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பர்க் ஆகியோரை விட அதிக ஊதியம் பெறும் CEO ஆக நிகேஷ் அரோரா திகழ்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |