அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம்
இந்திய வம்சாவளி வீரர் நிகில் சௌத்ரி ஷெஃப்பீல்ட் ஷீல்டு டெஸ்ட் போட்டியில் டாஸ்மானியா அணிக்காக முதல் சதத்தை பதிவு செய்தார்.
டாஸ்மானியா 623 ஓட்டங்கள்
சிட்னியில் டாஸ்மானியா மற்றும் நியூ சௌத் வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷெஃப்பீல்ட் ஷீல்டு டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 
டாஸ்மானியா அணி முதல் இன்னிங்சில் 623 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் ஜூவெல் 102 ஓட்டங்களும், டிம் வார்ட் 119 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியில் மிரட்டிய நிகில் சௌத்ரி (Nikhil Chaudhary) 184 பந்துகளில் 163 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.
நிகில் சௌத்ரி
இந்திய வம்சாவளி வீரரான நிகில் சௌத்ரிக்கு இது முதல் சதமாகும். பிராட்லி ஹோப் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட, அணித்தலைவர் சில்க் 56 ஓட்டங்கள் விளாசினார்.
முதல் இன்னிங்ஸில் 391 ஓட்டங்கள் எடுத்த நியூ சௌத் வேல்ஸ், மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணி 223 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
ஷெஃப்பீல்ட் ஷீல்டு தொடரில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையை நிகில் சௌத்ரி பெற்றுள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |