இந்திய வம்சாவளியை சேர்ந்த நிகில் ரவிசங்கர் Air New Zealand CEO-ஆக நியமனம்
Air New Zealand நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இந்திய வம்சாவளியை சேர்ந்த நிகில் ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிகில் ரவிசங்கர், ஏர் நியூசிலாந்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக 2025 அக்டோபர் 20 முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
தற்போது அந்த நிறுவனத்தில் தலைமை டிஜிட்டல் அதிகாரியாக (Chief Digital Officer) பணியாற்றி வரும் அவர், கடந்த 5 ஆண்டுகளாக நிறுவனம் சார்ந்த விமானத் துறையின் பல்வேறு அம்சங்களில் ஆழ்ந்த அனுபவம் பெற்றுள்ளார்.
"நிகில் தொழில்நுட்ப, வாடிக்கையாளர் சேவை, மற்றும் லாயல்டி திட்டங்களில் முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளார். அவரின் தலைமையில் நிறுவனம் புதிய பரிமாணங்களை நோக்கி பயணிக்கவுள்ளது" என ஏர் நியூசிலாந்த் தெரிவித்துள்ளது.
நிகில், முன்னதாக அசெஞ்சர் (Accenture) நிறுவனத்தின் மெனேஜிங் டைரக்டராகவும், வெக்டர் என்ற நிறுவனத்தில் Digital Officer-ஆகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
ஏர் நியூசிலாந்த், தினமும் 400க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி, 49 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நகரங்களை இணைக்கும் நிறுவனமாகும். இதன் விமானங்களில் Boeing 777, 787, Airbus 320, ATR, Q300 போன்ற 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன.
முக்கியமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் நியூசிலாந்த் மார்ச் 2025-ல் ஒரு நேரடி விமான சேவையை 2028-க்குள் அறிமுகப்படுத்தும் திட்டத்தையும், 16 தற்காலிக இணை வழித்தடங்களில் கோட்ஷேர் ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளன.
இந்தியாவின் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்களில் இருந்து பயணிகள், சிங்கப்பூர், மெல்போர்ன், சிட்னி வழியாக ஆக்லாந்து, வெலிங்டன், கிறைஸ்ட் சர்ச் போன்ற நகரங்களுக்கு பயணிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Nikhil Ravishankar Air New Zealand CEO, Indian-origin CEO Air New Zealand, Air India Air New Zealand codeshare, Direct flights India to New Zealand, Air New Zealand leadership change, Nikhil Ravishankar biography, Air connectivity India New Zealand, Indian CEOs in global aviation