டீ அருந்தும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர்
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர் ஓய்வுபெறும் சூழலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் தனபால். இவர் நீலகிரி மாவட்ட குற்ற பதிவேடு ஆவண காப்பக பிரிவில் பணியாற்றி வந்தார்.
இவரது பணிக்காலம் முடிந்து வெள்ளிக்கிழமை (இன்று) ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தனபால் கடை ஒன்றில் டீ அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தனபால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் தனபால் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம்.
எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |