லாட்ஜுல் நடந்த பயங்கரம்! எஸ்.ஐ நம்பி சென்ற 53 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி: முறையற்ற உறவால் வந்த வினை
தமிழகத்தில் காதலியை லாட்ஜில் வைத்து, இன்ஸ்பெக்டர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
. ஊட்டி அருகே இருக்கும் காந்தலில் இருக்கும் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா. பொலிஸ் எஸ்.ஐ ஆன இவர், க்யூ பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதான மாகி என்ற பெண்ணுக்கும் பழக்கும் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்து வந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாகவே இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதையடுத்து, திடீரென மாகியின் குடும்பத்தினருக்கு முஸ்தபா போன் செய்து, மாகி கொரோனாவால் இறந்துவிட்டதாகவும், இதனால் அவரின் உடலை பத்திரமாக கொண்டு வந்து வீட்டில் ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.
அதன் படி மாகியின் உடல் மீது துணியால் போர்த்தி, காரில் சடலத்தை கொண்டு சென்றுள்ளார். வீட்டிற்குள் கொண்டு சென்ற பின், உறவினர்கள், அவரது உடலில் இருந்த துணியை நீக்கி பார்த்த போது, உடல் எல்லாம் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் பின் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் விரைந்து வந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முஸ்தபாவை பிடித்து ரகசிய விசாரணை மேற்கொண்ட போது, அவர் மாகியை அடித்து கொலை செய்தது அம்பலமானது.
சம்பவ தினத்தன்று ஊட்டி பேருந்து நிலையம் அருகே இருக்கும் லாட்ஜுற்க்கு முஸ்தபா, மாகியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர்.
அதன் பின் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், விவகாரம் பெரிதாக, முஸ்தபா மாகியை கண்மூடித்தனமாக அடித்துள்ளார். இதில் மாகி அந்த இடத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.
அதன் பின்னரே குடும்பத்தினரிடம் இப்படி ஒரு நாடகத்தை நாடியுள்ளார். ஏனெனில், சமீபத்தில்தான் மாகிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டு குணமாகி வீட்டுக்கு வந்திருக்கிறார்.
ஆனால், மாகியின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது, மாகிக்கு மறுபடியும் தொற்று வந்துவிட்டது. இதுகுறித்து வெளியே யார்கிட்டயும் சொல்ல வேணாம். உடனே சென்று அடக்கம் செய்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
பொலிசார் முஸ்தபாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.