740 நாட்கள் போராட்டம்..!உலகின் உயரமான 14 சிகரங்கள்: 18 வயதில் நேபாள இளைஞர் படைத்துள்ள சாதனை
உலகின் உயரமான 14 சிகரங்களை இளம் வயதில் வெற்றிகரமாக ஏறி வென்ற நபராக நேபாள நாட்டை சேர்ந்த இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
உயரமான 14 சிகரங்கள்
18 வயது நேபாள இளைஞர் நிமா ரிஞ்சி ஷெர்பா(Nima Rinji Sherpa), உலகின் உயரமான 14 சிகரங்களையும் வெற்றி கொண்ட இளமையான மலையேற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அக்டோபர் 9ம் திகதி புதன்கிழமை திபெத்தின் சிஷாபங்க்மா சிகரத்தை(Mount Shishapangma in Tibet) அடைந்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.
14 Peaks Expedition
16 வயதில் தொடங்கிய பயணம்
ஷெர்பா 16 வயதில் தனது மலையேற்றத்தை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 740 நாட்களில் 8,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள 14 சிகரங்களையும் வெற்றிகரமாக ஏறி ஷெர்பா இந்த சாதனையை படைத்துள்ளார்.
உலகின் 8வது உயரமான மலையான மனஸ்லுவின்(Manaslu) சிகரத்தை அவர் செப்டம்பர் 30, 2022 அன்று அடைந்துள்ளார், இது அவரது 10 வகுப்பு உயர்நிலை தேர்வு முடிந்த சில நாட்களுக்கு பிறகு நடந்தது குறிப்பிடத்தக்கது.
14 Peaks Expedition
ஷெர்பாவின் ஒவ்வொரு பயணத்திலும் அவரது மலையேற்றக் கூட்டாளியான பாசாங் நூர்பு ஷெர்பா துணையாக இருந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |