ஒன்பது நாடுகள் இணைந்து புதிய உலக பாதுகாப்பு வங்கி: கனடா அறிவிப்பு
துருக்கியில் இன்று (ஜூலை 7) நடைபெற்ற 36வது நேட்டோ உச்சி மாநாட்டில், கனேடிய பிரதமர் மார்க் கார்னி, உலகளாவிய பாதுகாப்பு வங்கியை உருவாக்க ஒன்பது நாடுகள் இணைந்துள்ளதாக அறிவித்தார்.
இந்த புதிய வங்கி “Defence, Security and Resilience Bank (DSRB)” என அழைக்கப்படும்.
இதன் நோக்கம், கூட்டணி நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 100 பில்லியன் யூரோ (சுமார் $134 பில்லியன்) வரை குறைந்த வட்டி நிதி திரட்டுவதாகும்.
கார்னி தெரிவித்ததாவது,
அல்பேனியா, பெல்ஜியம், கிரீஸ், லாட்வியா, லக்ஸ்சம்பர்க், ருமேனியா, துருக்கி, உக்ரைன் ஆகிய நாடுகள் இந்த வங்கிக்கு ஆதரவு அளித்துள்ளன. இவை வங்கியின் ஆரம்ப கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை வடிவமைக்க உள்ளன.

கனடா, இந்த வங்கியின் அடித்தளத்தை அமைப்பதில் முன்னணி பங்கு வகிக்கிறது. “இந்த வங்கி, பாதுகாப்பு தொழில்துறை அடிப்படை வலுவூட்டும், கூட்டணி நாடுகளுக்கு தேவையான திறன்களை வழங்கும்” என கார்னி கூறினார்.
இந்த வங்கி 2027-ல் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழுமையான படையெடுப்பு, கூட்டணி நாடுகள் விரைவாகவும் பெரிய அளவிலும் பாதுகாப்பு திறன்களை உருவாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதாக கனடா தெரிவித்துள்ளது.
DSRB, AAA கிரெடிட் ரேட்டிங் பெற முயற்சி செய்கிறது. இதன் மூலம் குறைந்த வட்டி கடன்கள் வழங்கப்பட்டு, பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி உதவி கிடைக்கும். மேலும், தனியார் வங்கிகளுக்கு கடன் உத்தரவாதம் வழங்கி, பாதுகாப்பு தொழில்துறை விரிவாக்கத்தையும் ஊக்குவிக்க உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |